Appa
introduced me to books. He always reads something, still he
gets surrounded by books and bits and pieces of paper cuttings.


இரண்டாவது புத்தகம் பதின் பருவத்தில் படித்த
ஒரு போர்க்களமும் இரு பூக்களும் - வைரமுத்து எழுதியது. இது நண்பன் சதீஷ் அறிமுகம்
செய்த புத்தகம். அவங்க அப்பா இந்த நாவல பைண்டிங் செய்து வச்சிருந்தார். அற்புதமான
காதல் காவியம். வைரமுத்துவின் காட்சி விவரிப்பு பற்றி சொல்லவே வேண்டாம். இப்போ
வரைக்கும் எங்க தேடியும் கிட்டவில்லை.
மூன்றாவது அக்னி சிறகுகள் - APJ சொல்ல அருண் திவாரி எழுதியது. அப்பா வாங்கினதா ஞாபகம்.
எனக்கு இந்த ராக்கெட், துணை கோள்கள் (satellites), ஏவுகணைகள் மேல கொஞ்சம் ஆர்வம். அதுக்கும் அப்பா
தான் காரணம். சின்ன வயசில நைட்டு வாணாத்த காமிச்சு நான் எதோ கேக்க, அவரு நிலா, மேகம், நட்ச்திரம்னு ஆரம்பிச்சி அப்பப்ப ஏதேதோ சொல்வார், பல சமயம் நம்மள
எமாத்துராறோனு கூட சந்தேக பட்டிருக்கேன். அந்த ஆர்வங்களுக்கு மேதகு கலாம்
அவர்களின் சுய சரிதம் செம தீனியா இருந்திச்சி. ரெண்டு தடவ படிச்சிருக்கேன்.
மறுபடியும் படிக்கணும். சயின்சவிட அவரோட வாழ்கை செம morale boosterஆ இருக்கும்.
நாலாவது Who
moved my cheese - Spencer Johnson எழுதியது. நண்பன் சரவணசங்கர் அறிமுகபடுத்திய புத்தகம். ஒரு
மூணு மணி நேரம் இந்த புக்க பத்தி பேசி பில்ட்அப் கொடுத்து வாங்கி படிக்கச் வச்சான்.
ஒரு எலி கூட்டத்த வச்சு தன்னிலை மேம்பாடு (அதாங்க personality development) பற்றி விளக்கும் அருமையான புத்தகம்.
ஐந்தாவது பொன்னியின் செல்வன் - கல்கி எழுதியது.
ஒரு தமிழ் வரலாற்றூப் புதினம். இதுவும் அப்பா வாங்கினதுதான். சின்ன வயசில அவர் கல்கி
நாவல்கள் படிக்கிறத பார்த்து இருக்கேன். அப்போ அது மேல ஆர்வம் வரல. யாராவது பூக்ஸ்
பத்தி பேசினா கல்கி பத்தி கண்டிப்பா எதாவது சொல்வாங்க. அப்படி என்னதான்
எழுதிருக்கார்னு ஆர்வத்துல படிச்சி அவோரடா எழுத்தில் மயங்கியதில் நானும் ஒருவன்.
ஆறாவது World
is flat - Friedman எழுதியது. எதோ படத்தோட torrent தேடிக்கிட்டு இருந்தப்போ banned books னு title போட்டு ஒரு torrent.
அப்படி என்ன தான்
இருக்கும் டவுன்லோட் பண்ணி பார்த்தப்ப பல pdf books கூட இதுவும் இருந்திச்சி. புக்
title பார்த்திட்டு எதோ
கான்ஸ்பிரசி புக் போலன்னு படிக்க ஆரம்பிச்சா Globalization,
outsourcing, supply chain நு இப்போதைய இந்திய வளர்ச்சி மற்றும் உலகமயமாக்கல் பற்றி
விரிவா எழுதி இருந்தாங்க. இவ்ளோ நல்ல புத்தகத்த ஏன் இந்த list ல வச்சானுங்கனு இன்னும் தெரியல.
ஏழாவது Poor
Little Rich Slum - Rashmi Bansal எழுதியது. உலகின் மிக பெரிய slum மும்பை தாரவி பற்றியது.
அப்பகுதி மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் பற்றியது. தாரவி பற்றிய
உங்களின் மதிப்பிடை முற்றிலும் மாற்றக்கூடிய புத்தகம். A must read for entrepreneurs.
இது கூடவே இதே எழுத்தாளர் எழுதிய I Have a Dream மும் வாங்கி படிச்சு பார்த்தேன் எவ்ளோ முயற்சி
பண்ணாலும் சில பக்கங்களுக்கு மேல தாண்டவே முடில, ஏற்கனவே படிச்சது தெரியாம படிச்சதையே திரும்ப திரும்ப
படிச்சிருக்கேன், சில பக்கம் போனதுக்கு
அப்புறம் ஏற்கனவே படிச்ச மாதிரி இருகேன்னு தோணும். இது வேளைக்கு ஆவாதுன்னு அப்படியே
வச்சுட்டேன். அதுக்கு காரணம் புக் இல்ல, எனக்கு அப்போ கல்யாண சீசன் அதான்!!!. இனிமேதான்
மறுபடி மொதல்ல இருந்து படிக்கணும்.
இதுவே என் மனதில் நின்ற புத்தகங்களின் வரிசை. Well, thanks Javid. You made me to recollect, remember and cherish those
memories.
Here is the list in short:
- நவரதினமலை
- ஒரு போர்க்களமும் இரு பூக்களும் - வைரமுத்து
- Wings of fire - APJ, Arun Tiwari
- Who moved my cheese - Spencer Johnson
- பொன்னியின் செல்வன் - கல்கி
- World is flat - Friedman
- Poor Little Rich Slum - Rashmi Bansal
No comments:
Post a Comment